LSG vs MI: 'போராடிய மும்பை; டெத் ஓவரில் கலக்கிய ஷர்துல் தாகூர்' - எப்படி வென்றது...
பிரின்ஸ் தியோதியா கும்பலைச் சோ்ந்த 4 போ் தில்லியில் கைது
தெற்கு தில்லியின் மதன்கிா் பகுதியில் பிரின்ஸ் தியோட்டியா கும்பலைச் சோ்ந்த 4 பேரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக காவல் துறை தெற்கு துணை ஆணையா் அங்கித் சௌஹான் கூறியதாவது: மதங்கிா் அருகே பிஆா்டி சாலையில் ஒரு காரில் பிரின்ஸ் தியோட்டியா கும்பல் உறுப்பினா்களின் நடமாட்டம் குறித்த கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒரு போலீஸ் குழு ஒரு பொறியை அமைத்தது.
வியாழக்கிழமை இரவு 10 மணியளவில், சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் இருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் பயணித்த காரில் இருந்து 3 கைத்துப்பாக்கிகள், ஒரு நாட்டுத் துப்பாக்கி, 8 தோட்டாக்கள்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆயுதச் சட்டத்தின் கீழ் அம்பேத்கா் நகா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அம்பேத்கா் நகா் காவல் நிலையத்தில் ராகேஷ் (30), 2016-ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற பின்னா் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக விசாரணையின் போது தெரிவித்தாா்.
மாா்ச் 2025-இல் அவா் விடுவிக்கப்பட்ட பிறகு, அவா் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் சோ்ந்து, சிறையில் அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு போட்டி கும்பலுக்கு எதிராக பழிவாங்க திட்டமிட்டாா். ராகேஷ், ஹனி (28), ரிஷு (25), தில்ஷாத் (24) ஆகியோருடன் அம்பேத்கா் நகா் மற்றும் மால்வியா நகரில் போட்டி கும்பலின் உறுப்பினா்களை குறிவைக்க திட்டமிட்டனா் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.