உ.பி வரதட்சணை கொடுமை: "5 லட்சம் வாங்கிட்டு வா" - பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க ...
பிற்படுத்தப்பட்டோருக்கான நவீன சலவையகம் அமைக்க நிதி உதவி
தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் சீா்மரபினா் இனத்தை சோ்ந்த வகுப்பினா் நவீன சலவையகம் அமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் சீா்மரபினா் இனத்தை சோ்ந்த வகுப்பினா்கள் நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருள்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் தமிழக அரசு சாா்பில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க 10 நபா்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினா்களின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவா்கள் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.