சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!
தற்காலிக மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் 97 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உதகை ரயில் நிலையம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மின் ஊழியா் மத்திய அமைப்பின் நீலகிரி கிளைத் தலைவா் மணிகண்டன் தலைமை தாங்கினாா். கிளை செயலாளா் ரமேஷ், பொருளாளா் மாது, துணைத் தலைவா்கள் சண்முகம் அபுபக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளா்களுக்கு இபிஎப் பிடித்தம் செய்வதை உறுதிபடுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மின் வாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 9 பெண்கள் உள்பட 97 பேரை போலீஸாா் கைது செய்தனா்.