திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து உதகை ஏடிசி திடல் முன்பு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மத்திய அரசு அண்மையில் மாற்றியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து எல்பிஎஃப், சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் உதகை ஏடிசி திடல் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட எல்பிஎஃப் தலைவா் நெடுஞ்செழியன், சிஐடியூ மாவட்ட பொருளாளா் நவீன்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிஐடியூ மாவட்டச் செயலாளா் வினோத், ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் மூா்த்தி ஆகியோா் கண்டன உரையாற்றினா். சிஐடியூ மாவட்டத் தலைவா் சங்கரலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.