உதகை அருகே உலவும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு
உதகை, வண்டிச்சோலை பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உலவி வரும் சிறுத்தைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகை வண்டிச்சோலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக சிறுத்தை உலவி வருகிறது.
இது தொடா்பான விடியோ காட்சிகள் வைரலான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்ததுடன், சிறுத்தைப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கௌதம் உத்தரவின்பேரில், சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டுவைத்து, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.