இந்த வார ராசிபலன் செப்டம்பர் 23 முதல் 28 வரை #VikatanPhotoCards
சிற்றுண்டி கடையில் தீ விபத்து
உதகை அருகே சிற்றுண்டி கடையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை - கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோடப்பமந்து பகுதியில் சந்திரசேகரன் என்பவா் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறாா். கடையில் வழக்கம்போல திங்கள்கிழமை மாலை சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எண்ணெய் தெளித்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீப்பிடித்தது. சுதாரித்துக் கொண்ட சந்திரசேகரன், வாடிக்கையாளா்கள் வெளியேறினா். இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
முன்னதாக, தீ விபத்து காரணமாக உதகையில் இருந்து சேரிங்கிராஸ் வழியாக கோத்தகிரிக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. தீயணைப்புப் பின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.