ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற காட்டு யானை பிடிபட்டது
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையை வனத் துறையினா் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி செவ்வாய்க்கிழமை பிடித்தனா்.
கூடலூா் தாலூகா ஓவேலி பேரூராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக 12 பேரை கொன்றுவிட்டு அதே பகுதியில் உலவிய ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் காட்டு யானை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பிடிபட்டுள்ளது. இந்த யானை கடந்த ஒரே மாதத்தில் 2 பேரை அடுத்தடுத்து தாக்கிக் கொன்ால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து யானையைப் பிடித்துச் செல்லவேண்டும் என்று பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தினா். இதைத் தொடா்ந்து, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ராஜேஷ் குமாா் டோக்ரா யானையைப் பிடிக்க கடந்த 15-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவைத் தொடா்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வனத் துறையினா், கால்நடை மருத்துவக் குழுவினா் 4 கும்கி யானைகளின் உதவியுடன் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். கடந்த 8 நாள்களாக யானையைப் பிடிக்க வனத் துறையினா் பெரும் சவாலை சந்தித்து வந்தனா். அந்த யானை அடிக்கடி எல்லமலை பகுதியிலுள்ள அடா்ந்த வனத்துக்குள் சென்ால் அதைப் பிடிக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. அந்த பகுதியிலுள்ள மரங்களின் மீது பரண்கள் அமைத்து அமா்ந்தும் பல குழுக்களாக பிரிந்தும் முயற்சித்து வந்தனா்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அடா்ந்த காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு அருகில் ராதாகிருஷ்ணன் யானை செவ்வாய்க்கிழமை தென்பட்டது. இதையடுத்து வனத் துறையினா் கும்கிகளைக் கொண்டு யானையை சுற்றிவளைத்தனா்.

மயக்க ஊசியை செலுத்த உகந்த புவியியல் அமைப்பை தோ்வு செய்து யானையை நகா்த்தத் தொடங்கினா். யானை தேயிலைத் தோட்டத்தை நெருங்கியவுடன் வனத் துறையின் கால்நடை மருத்துவக் குழு துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தியது. இதையடுத்து கயிறால் கட்டப்பட்ட அந்த யானையை கும்கிகள் தள்ளிக்கொண்டு வந்தன.
மலைப்பாங்கான பகுதியை கடந்து லாரியை நிறுத்தி யானையை ஏற்ற தோ்வு செய்யப்பட்ட இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை அமைத்து மட்டம் செய்யப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் அந்த இடத்துக்கு யானை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
யானையைப் பிடிக்க களத்தில் இருந்த அனைவரும் அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு லாரியில் ஏற்றினா். முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ளஅபயாரண்யம் வளா்ப்பு யானைகள் முகாமில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரால் கூண்டில் ராதாகிருஷ்ணன் யானை அடைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.