சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது
காங்கயத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து, போலீஸாா் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, காங்கயம் சாலை எல்.கே.சி. நகரில் உள்ள மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் சோதனை மேற்கொண்டு அங்கிருந்த 1.500 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரான குமாா் (48) என்பவரை கைது செய்தனா்.