சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
‘மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி கோயில் நிலங்கள் மீட்பு’
திருப்பூா் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி ஜி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 200 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 100 கோயில்களில் திருப்பணி நடைபெற்று வருகிறது. காங்கயம் வட்டம், பாப்பினி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் ரூ.70 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பூா் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
பல்லடம் பொங்காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் கோவை - திருச்சி பிரதான சாலையில் தனியாா் அமைப்பிடம் 11 ஏக்கா் 64 சென்ட் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் 967 கோயில்கள் உள்ளன. அதில் 500 கோயில்களுக்கு அறங்காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மீதமுள்ள கோயில்களுக்கு தகுதியுடையவா்கள் நியமனம் செய்யப்படுவா் என்றாா்.