செய்திகள் :

புதுச்சேரி: "தலைவலி, வாந்தி அவ்ளோதான்.." – மாணவி மீதான அத்துமீறலை மறைத்து மழுப்பிய பல்கலை. வார்டன்

post image

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவி, வெளி நபர்களால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வந்த புதுச்சேரி பொறியியல் கல்லூரி (Pondicherry Engineering collge), சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக (Puducherry Technical University) தரம் உயர்த்தப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தினுள் கடந்த 11 ஆம் தேதி சனிக்கிழமை மாலை நுழைந்த நான்கு வெளி நபர்கள், அங்கு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த வடமாநில மாணவி ஒருவரை வீடியோ எடுத்திருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், நான்கு பேரும் சேர்ந்து அந்த மாணவியையும், ஆண் நண்பரையும் தாக்கியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன்
அ.தி.மு.க புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன்

அப்போது அந்த மாணவி கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அந்த நால்வரும் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த மாணவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் குறித்து மாணவி தரப்பிலும், பல்கலைக்கழக தரப்பிலும் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்படவில்லை. அதேசமயம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் தகவல் பரவியது. பல்கலைக்கழக நிர்வாகம் புகார் கொடுக்கத் தயாராக இல்லாத நிலையில், சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி கலைவாணன் தாமாக முன்வந்து விசாரணையில் இறங்கினார். அந்த விசாரணையில் மாணவி தாக்கப்பட்டது உண்மை எனத் தெரிய வந்தது.

அதையடுத்து பல்கலைக்கழகத்திடம் 14 ஆம் தேதி புகாரைப் பெற்று, நான்கு பேரையும் உடனடியாக கைது செய்தார். அதில் இருவர் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களை விடுவித்து, ஷாம், விமல் என்ற இருவரைச் சிறைக்கு அனுப்பினர் போலீஸார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன், ``புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கோஷ்டிப் பூசலால், நிர்வாகம் சீர்கெட்டுக் கிடக்கிறது. பல்கலைக்குப் போதுமான பாதுகாப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே சென்று மது அருந்துவது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களை அரங்கேற்றுகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த 11 ஆம் தேதி வெளி நபர்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை

மருத்துவமனை நிர்வாகம் எம்.எல்.சி பதிவு செய்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தது. ஆனால் சம்பவம் நடைபெற்று 3 நாட்கள் கழித்து காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பல்கலைக்கழகத்தின் அலட்சியம், பொறுப்பற்ற செயல் மற்றும் கால தாமத நடவடிக்கையால் தவறான செய்திகள் வெளியாகின்றன. அது நம் மாநிலத்திற்கு இழுக்கு. இந்த விவகாரம் தொடர்பாகப் பெண் ஐ.பி.எஸ் விசாரணை அதிகாரியுடன், நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் முன்னிலையிலேயே பல்கலைக்கழகத்தின் டீன் (அட்மின்) மருத்துவர் கலைச்செல்வனுக்குப் போன் செய்து ஸ்பீக்கரில் போட்டார்.

தொடர்ந்து மாணவிக்கு என்ன நடந்தது என்று கேட்டார் அன்பழகன். அதற்கு எதிர்முனையில் பேசிய டீன் கலைச்செல்வன், "அந்த பெண்ணை ஆம்புலன்ஸில்தான் அழைத்துச் சென்றோம். ஆனால் தலைவலி, வாந்திக்கு எதற்கு ட்ரீட்மெண்ட் என்று கூறி எம்.எல்.சி வேண்டாம் என்று கூறிவிட்டு அழைத்து வந்துவிட்டோம்” என்றார். உடனே கடுப்பான அன்பழகன், ``நீங்க வார்டன்தானே ? எம்.எல்.சி போடவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள். அன்று போடப்பட்ட எம்.எல்.சி-யில் தன்னை 4 பேர் தாக்கியதாக அந்த மாணவியே கூறியிருக்கிறார். அப்படி இருக்கும்போது எம்.எல்.சி போடவில்லை என்று நீங்கள் சொன்னால் உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?

கைது
கைது

நீங்கள் பொய் சொல்லக் கூடாது. நீங்கள் யாரையாவது காப்பாற்றுவதற்காகப் பேசினால் உங்களுக்குப் பிரச்னை வந்து விடும். ஆனால் நீங்கள் எம்.எல்.சி போடவில்லை என்கிறீர்கள். அந்த எம்.எல்.சி-யை உங்களுக்கு அனுப்பி வைத்து, ஆளுநரிடம் உங்களைப் பற்றிச் சொல்லலாமா ?” என்றவர்.

``நீங்கள் அந்த மாணவியுடன் மருத்துவமனைக்குச் சென்றீர்களா?” என்று கேட்கிறார். அதற்கு, ``நான் மருத்துவமனைக்குச் செல்லவில்லை வாட்ஸ்-அப்பில் வந்த தகவலை வைத்துச் சொல்கிறேன்” என்றார். அதற்கு, ``மருத்துவமனைக்குப் போகாமலேயே பக்கத்திலிருந்து பார்த்ததைப் போல வாந்தி, பேதி என்று கூறுகிறீர்கள். போனை வையுங்கள்” என்று லெஃப்ட் ரைட் வாங்கினார். அன்பழகனின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

Nagpur: 50 மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சைக்காலஜிஸ்ட்; பிடிபட்டது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கடந்த 15 ஆண்டுகளில் 50க்கும் மேலான மாணவிகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டியதாக 47 வயது சைக்காலஜிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றத்தில் ஈடுபட்ட நபரின் பெயரைச் சட்ட மற்றும... மேலும் பார்க்க

கேரளா: `நிறமில்லை, ஆங்கிலப் புலமையில்லை...' - கணவர் வீட்டாரின் துன்புறுத்தலால் இளம்பெண் தற்கொலை

கேரளாவில், 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இளம்பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அவரின் நிறம் மற்றும் ஆங்கிலப் புலமையின்மையால் கணவர் வீட்டார் வீட்டாரின் த... மேலும் பார்க்க

தோழியின் கணவருக்குக் கத்திக்குத்து; போதையில் திமுக நிர்வாகி வெறிச் செயல்; வைரலாகும் வீடியோ

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மலைப்பாளையம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்து வந்தவர் தி.மு.க-வைச் சேர்ந்த தேவராஜ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி ஜான்சிராணியும் பழகி வ... மேலும் பார்க்க

மும்பையில் தொடரும் பணமோசடி; 24 சதவீத வட்டிக்கு ஆசைப்பட்டு 100 கோடியை இழந்த 3000 பேர்; பின்னணி என்ன?

மும்பையில் கடந்த வாரம்தான் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் டோரஸ் நகைக்கடை என்ற பெயரில் நகரில் முக்கிய இடங்களில் கடைகளைத் திறந்து பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தனர். வாரம் 5 முதல் 12... மேலும் பார்க்க

சென்னையில் மீண்டும் துப்பாக்கி சத்தம் - பிரபல ரௌடி `பாம்' சரவணன் சிக்கியது எப்படி?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, பிரபல ரௌடி நாகேந்திரன், அ... மேலும் பார்க்க

Saif Ali Khan: அதிகாலையில் கொள்ளை முயற்சி; தடுக்க முயன்ற நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக் குத்து!

மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டு பாந்த்ரா பங்களாவில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடிகர் சைஃப் அலிகான் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன... மேலும் பார்க்க