செய்திகள் :

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பேரவையில் 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

post image

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, 16-வது முறையாக சட்டபேரவையில் அரசு கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார் அவைத் தலைவர் செல்வம்.

புதுச்சேரியில் கடந்த 10-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. 12-ஆம் தேதி பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்று இறுதி நாளான தனிநபர் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஏற்கனவே 15 முறை ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ள நிலையில் மீண்டும் இன்று காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

இதன் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர்(திமுக) சிவா, இப்போதைக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்றும், மாநில அந்தஸ்து பெற ஆட்சியை கலைத்து விட்டு வாருங்கள். போராடுவோம் என முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து தனி நபர் தீர்மானத்தை அரசு தீர்மானமாக முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்தார். இதையடுத்து அவைத் தலைவர் செல்வம், மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஏகமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க

திருப்பூரைப் பாராட்டிய பிரதமர் மோடி!

மனதின் குரல் நிகழ்ச்சியில் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பி... மேலும் பார்க்க

1-5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடக்கக் கல்வி இயக்... மேலும் பார்க்க

ஏப்.2இல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வ... மேலும் பார்க்க