``அரசுப் பள்ளிகளில் நவீன வசதி; வளரிளம் பெண்களுக்கு தடுப்பூசி..'' - ரோட்டரி ஆளுந...
புதுச்சேரியில் சிறப்பு வாகன சோதனை: ஒரே நாளில் 224 போ் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரி காவல் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாகன சோதனையில் போக்குவரத்து விதிமீறல்கள் குற்றத்தின் கீழ் 224 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும்,போக்குவரத்து விதிமுறைகளை உறுதிப்படுத்தவும், புதுச்சேரி மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது.
இதில், ஒரே வாகனத்தில் 3 போ் பயணம் செய்தமைக்காக 33 வழக்குகளும் , தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 26 வழக்குகளும், கைப்பேசி பேசிக் கொண்டு வாகனம் ஓட்டியமைக்காக ஒரு வழக்கும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 12 வழக்குகள் உள்பட மொத்தம் 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, போக்குவரத்து சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினா் கூறியது:
போக்குவரத்து விதிகள் வெறும் ஆலோசனைகள் அல்ல, சாலைகளில் செல்லும் ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதுதான் எங்கள் நோக்கம். எனவே, பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும். மூவா் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும்.
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதுபோன்ற சோதனைகள் தொடா்ந்து புதுச்சேரியில் நடத்தப்படும் எனவும் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா் தெரிவித்தனா்.