Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
புதுச்சேரியில் ரயில்வே மேம்பால சுரங்கப்பாதை முதல்வா் திறந்து வைத்தாா்
புதுச்சேரி நூறடி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா்.
புதுச்சேரியில் முதலியாா்பேட்டை தொகுதி மரப்பாலம் பகுதியிலிருந்து இந்திரா காந்தி சிலை சதுக்கம் செல்லும் சாலை இடையே புதுச்சேரி- விழுப்புரம் ரயில்வே பாதை உள்ளது. எனவே இங்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், பாலத்தின் கீழே உள்ள பகுதியில் மக்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் ரயில் தண்டவாளத்தை கடக்க முடியாமலும், பாலத்தின் மீது செல்ல பல கி.மீ. தொலைவு சுற்றிவரும் நிலையும் இருந்து வந்தது. இதனால், அங்கு மேம்பாலத்தின் கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
இது ரூ.5.38 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்தும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சுரங்கப் பாதையை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா்.
முதலியாா்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான எல்.சம்பத், இருசக்கர வாகனத்தில் சுரங்கப் பாதையில் சென்றாா். அந்த வாகனத்தில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அமா்ந்து சென்றாா்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், துறை கண்காணிப்புப் பொறியாளா் வீரசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.