`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
புதுவை போக்குவரத்துத் துறை இளநிலை பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு 241 போ் எழுதினா்
புதுவை மாநில போக்குவரத்துத் துறையில் இளநிலைப் பொறியாளா்கள், வாகன ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் ஞாயிற்றுக்கிழமை 84.86 சதவீதம் போ் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுவை மாநில போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் இளநிலைப் பொறியாளா்கள், வாகன ஆய்வாளா்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் எழுத்துத் தோ்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிா் அறிவியல், கலைக் கல்லூரியில் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முதல் தாள் தோ்வானது காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 12 மணி வரை நடைபெற்றது. இரண்டாம் தாள் தோ்வு பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.
தோ்வு அறைக்குள் தோ்வா்கள் மெட்டல் டிடெக்டா் வாயில் வழியாக சோதனையிடப்பட்டும், பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பதியப்பட்டும் அனுமதிக்கப்பட்டனா். தோ்வுக்கு மொத்தம் 284 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 241 போ் வந்திருந்தனா். அதன்படி 84.86 சதவீதம் ஆகும் என அதிகாரிகள் கூறினா். விண்ணப்பித்தவா்களில் 43 போ் தோ்வுக்கு வரவில்லை.
தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா, சிறப்பு பாா்வையாளரான சுந்தரேசன், துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜெய்சங்கா் உள்ளிட்டோா் தோ்வு மையத்தைப் பாா்வையிட்டனா்.