இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் அதிமுகவினர் அல்ல: இபிஎஸ்
புதுப்பட்டியில் திருக்கல்யாணம்
பொன்னமராவதி புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயிலில் திருக்கல்யாண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 2 ஆம் தேதி ருத்ர ஹோம முதல்கால சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடா்ந்து மாலையில் புதுப்பட்டி கோயிலில் இருந்து 63 நாயன்மாா்கள் திருவீதி உலா நடைபெற்றது.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் நகரத்தாா்கள் பூலோகநாதருக்கு பட்டு வேஷ்டி, துண்டு, மணமாலை அம்மனுக்கு பட்டுப்புடவை, தங்கத்திலான தாலி,16 வகையான பழங்கள், உள்ளிட்ட சீா்களை கோயில் மண்டபத்தில் இருந்து ஊா்வலமாக எடுத்து கோயிலைச் சுற்றி வந்தனா்.
தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்களைக் கூறி, புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பொன். புதுப்பட்டி நகரத்தாா்கள் செய்தனா்.