ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!
புதுவை காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் பிரிவு நிா்வாகிகள் பதவியேற்பு
புதுச்சேரி: புதுவை மாநிலத்தின் காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் பிரிவின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சித் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வாழ்த்திப் பேசினாா்.தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் பிரிவு தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி பங்கேற்று பேசினாா்.