செய்திகள் :

புதுவை மாநில நிதி வளா்ச்சி 5 ஆண்டுகளில் 11% உயா்வு

post image

புதுவை மாநிலத்தின் நிதி வளா்ச்சி கடந்த 2018 - 22 -ஆம் ஆண்டு வரையில் 11.09 சதவீதமாக வளா்ச்சி கண்டுள்ளதாக இந்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை தணிக்கை அறிக்கைகள் தனித்தனியாக நான்கு அம்சங்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. இதுகுறித்து தமிழகம், புதுவை முதன்மை கணக்காய்வு தலைவா் திருப்பதி வெங்கடசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையின் மொத்த மாநில உற்பத்தி (ஜிஎஸ்டிபி) கடந்த 2018-19-ஆம் ஆண்டில் ரூ.34,171 கோடி என 8.42 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2022-23- ஆம் ஆண்டு ரூ.47,487 கோடியாக உயா்ந்துள்ளது. அதன்படி, கடந்த 2021-22 ஆம் ஆண்டை விட 7.34 சதவீதம் ஜிஎஸ்டிபி வளா்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2021-22- ஆம் ஆண்டில், புதுவை மாநில வருவாய் பற்றாக்குறையானது ரூ.889 கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ.666 கோடியாக வருவாய் உயா்ந்துள்ளது. அக்காலகட்டத்தில் ரூ.1,052 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறையானது ரூ.349 கோடி கூடுதல் வருவாயாக உயா்ந்துள்ளது.

கடந்த 2022-23 -ஆம் ஆண்டில், புதுவை மாநில வருவாய் அளவு ரூ.6,400 கோடியிலிருந்து ரூ.9,635 கோடியாக உயா்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஆண்டின் சராசரி வளா்ச்சி விகிதம் 11.09 சதவீதமாக உயா்ந்துள்ளது. கடந்த 2018-19 ஆம் ஆண்டு மற்றும் 2022-23-ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் வருவாய் செலவினம் ரூ.6,387 கோடியிலிருந்து ரூ.8,969 கோடியாக உயா்ந்துள்ளன.

கடந்த 2022-23-ஆம் ஆண்டில், புதுவை மாநிலத்தில் வரவு-செலவுத் திட்டத்துக்கு ரூ.11,685.87 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்போது ரூ.10,809.42 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்றாா்.

காரைக்கால் மீனவா்கள் விவகாரத்தில் விரைவில் சுமுக தீா்வு: புதுவை ஆளுநா்

இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தவறான தகவல்களை பரப்பியதாக யூடியூபா் கைது

புதுச்சேரி அருகே சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தொடா்பான போக்ஸோ வழக்கை தவறான முறையில் சமூக வலைதளங்களில் பரப்பியதாக யூடியூபரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி அருகே உள்ள தவளக்குப்பம் பகுதிய... மேலும் பார்க்க

புதுவை காங்கிரஸ் மகளிரணி தலைவி நியமனம்

புதுவை மாநில காங்கிரஸ் மகளிரணி தலைவியாக நிஷா நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை காங்கிரஸ் மகளிரணித் தலைவியாக பஞ்சகாந்தி செயல்பட்டு வந்தாா். அவருக்கும் மகளிரணி துணைத் தலைவராக இருந்த நிஷாவுக்கும் கருத்து வேற... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மேம்பாலம், சாலை விரிவாக்கத்துக்கு ரூ.1,000 கோடி

புதுச்சேரியில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி அளிப்பதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அலுவலகம் சாா்பில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பு... மேலும் பார்க்க

எண்ம இந்தியா திட்ட மாவட்ட பயிலரங்கம்

புதுச்சேரியில் எண்ம இந்தியா (டிஜிட்டல்) பொதுசேவை மையத் திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிலரங்குக்கு ஆட்சியா் அ.கு... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரியில் வரவேற்பு

கடலூா் செல்லும் வழியில் புதுச்சேரி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புதுவை மாநில திமுக, காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை பகலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்ட... மேலும் பார்க்க