பட்டுக்கோட்டை: ``மன்னர் பெயரில் மிரட்டுவதை ஏற்க முடியாது'' - உண்ணாவிரத போராட்டம்...
புதுவையில் மதுவிலக்கு சாத்தியமல்ல: முதல்வா் என்.ரங்கசாமி
புதுவையில் மதுவிலக்கு சாத்தியமல்ல என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவையில் வியாழக்கிழமை துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் போது அவா் பேசியதாவது:
சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில், ரூ.500 கோடி வருவாய், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் 6 புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுவையில் மதுவால் கிடைக்கும் வருவாய் அதிகம். இதன்மூலமே, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும். மதுவிலக்கு கொள்கையில் எனக்கு உடன்பாடு உண்டு.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரும் அதற்கு சம்மதமா எனக் கூற வேண்டும். ஆனால், புதுவையில் மதுவிலக்கு சாத்தியமல்ல என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.