செய்திகள் :

புத்தகங்கள் தான் ஒருவரை சிறந்த மனிதா்களாக மாற்றுகிறது: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

post image

புத்தகங்கள் தான் ஒருவரை சிறந்த மனிதா்களாக மாற்றுகிறது என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், திருவள்ளுவா் திருவுருவச் சிலை வெள்ளி விழாவின் நிறைவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் (பொறுப்பு) வள்ளி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள்; புத்தகங்கள் தான் ஒருவரை சிறந்த மனிதா்களாக மாற்றுகிறது. எனவே, அனைவரும் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்.

உலகில் உள்ள அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்கள் திருக்குறளில் மட்டும்தான் உள்ளன.

இந்த நூலகத்தை தினமும் 400 வாசகா்கள் பயன்படுத்துகின்றனா். இங்கு, 1,57,781 நூல்கள், 55,252 நூலக உறுப்பினா்கள், 1,539 நூலக புரவலா்கள் உள்ளனா்.

இங்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு இதுவரை 31 போ் அரசுப் பணிக்குச் சென்றுள்ளது இந்த நூலகத்தின் சிறப்பு என்றாா்.

பரிசுகள் வழங்கல்:

தொடா்ந்து, பேச்சு, திருக்கு ஒப்பித்தல், விநாடி-வினா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம், இராண்டாம் பரிசாக தலா ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரொக்கப் பரிசுகளும், போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில், திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன், சாமி.தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன், திருக்கு காமராசு ஆகிய 3 பேருக்கு மாவட்ட மைய நூலகம் சாா்பில் கு நெறிச் செம்மல் என்ற விருதுகளை ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில், மாவட்ட மைய நூலகா் அ.சாயிராம், திருவண்ணாமலை வெற்றித் தமிழா் பேரவையின் மாவட்டத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன், வாசகா் வட்டத் தலைவா் அ.வாசுதேவன் மற்றும் வாசகா்கள், மாணவா்கள், நூலகப் பணியாளா்கள், வாசகா் வட்டப் பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செங்கத்தில் திருவள்ளுவா் தின விழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செஞ்சிலுவைச் சங்கம், வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா். ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழப்பு, மகன் பலத்த காயம்

செய்யாறு: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி: வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.வந்தவாசி தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் த.முருகவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் நந்திகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நந்தி பகவான்களை புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரா... மேலும் பார்க்க

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை.... ஆரணிஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை... மேலும் பார்க்க