செய்திகள் :

புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் புதிய மோசடி.. எச்சரிக்கும் காவல்துறை!

post image

அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான ஏபிகே லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த லிங்கில் உங்கள் பெயர் மற்றும் யாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமோ அவரது பெயரை பதிவிட்டால், புத்தாண்டு வாழ்த்து அனுப்பலாம் என்று அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்து செயலிக்கான லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படும் அபாயமுள்ளது என்று காவல்துறை வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள்து.

இதுவரை சூழ்நிலைக்கு ஏற்ப பல மோசடிகளை சைபர் குற்றவாளிகள் அரங்கேற்றியிருக்கும் நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் வரும் மோசடி குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டிருக்கும் தகவலில், இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து செயலி (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

மோசடி நடைபெறும் விதம் எப்படி என்றால், உங்களது வாட்ஸப் எண்ணுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும் அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

நீங்கள் அந்த apk file-ஐ ஓபன் செய்துவிட்டால் உங்களது போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். மேலும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.

எனவே வாட்ஸ்ஆப்பில் வரும் இதுபோன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை, எதிர்பாராதவிதமாக இதுபோன்ற பண மோசடிக்கு ஆளானால், சைபர் கிரைம் இணையதளமான cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தொடங்கியது டோக்கன் விநியோகம்

பொங்கல் பண்டிகையொட்டி தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்க... மேலும் பார்க்க

என்ன டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி மாதம் 2 நாள்கள் விடுமுறையா?

விடுமுறைகளுக்குப் பஞ்சமே இல்லாத ஜனவரியில், டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை விடப்படுகிறது. அதிலும் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமையாக வருகிறது.மழை, வெள்ளம், புயல் அடித்தால் கூட விடுமுறை விடப்படாத ... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியுடன் நெடுஞ்சலக்குடி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு: மக்கள் சாலை மறியல்

லால்குடி அருகே நெடுஞ்சலக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை ஊராட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சி-சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போர... மேலும் பார்க்க

ஆட்டு மந்தையுடன் பாஜக மகளிரணியினர் அடைக்கப்பட்டதால் சர்ச்சை!

மதுரையில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் கைது செய்யப்பட்ட பாஜக மகளிரணியினர் அடைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக்... மேலும் பார்க்க

வேலு நாச்சியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் முதல் ... மேலும் பார்க்க

சென்னையில் ஆயுத விற்பனையா? போதைப் பொருள் கும்பலிடம் துப்பாக்கிகள் பறிமுதல்!

சென்னையில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கும்பலிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்... மேலும் பார்க்க