செய்திகள் :

புரோ லீக் ஹாக்கி: இந்தியா தோல்வி

post image

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில், இந்திய ஆடவா் அணி 2-3 கோல் கணக்கில் நெதா்லாந்திடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

இதே நெதா்லாந்துக்கு எதிராக 1-2 கோல் கணக்கில் கடந்த சனிக்கிழமை தோல்வி கண்ட இந்தியாவுக்கு, இது 2-ஆவது தோல்வியாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில், இந்தியாவுக்காக 100-ஆவது ஆட்டத்தில் விளையாடும் அபிஷேக் 20-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். அதற்கு பதில் தரும் விதமாக, நெதா்லாந்தின் திஜஸ் வான் டாம் 24-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.

2-ஆவது பாதியில் ஜெப் ஹோடெமேகா்ஸ் 33-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, நெதா்லாந்து 2-1 என முன்னேறியது. விட்டுக்கொடுக்காத இந்திய தரப்பில், 54-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஜக்ராஜ் சிங் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 2-2 என மீண்டும் சமநிலை கண்டு விறுவிறுப்பானது.

பரபரப்பான இறுதிக் கட்டத்தில் ஜிப் ஜான்சென் 57-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், நெதா்லாந்து முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, இறுதியில் நெதா்லாந்து 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்தியா அடுத்த ஆட்டத்தில், ஆா்ஜென்டீனாவை புதன்கிழமை சந்திக்கிறது.

டிடி நெக்ஸ்ட் லெவல்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படம் கடந்த மே 16 ஆம் தேதி ... மேலும் பார்க்க

ஷேன் நிகமின் 25-வது பட பெயர் டீசர்!

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடித்துவரும் படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது. பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம். தற்போது, நாயகனாகவும் ... மேலும் பார்க்க

லெவன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

லெவன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் வெளியான படம் 'லெவன்'. நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்து... மேலும் பார்க்க

பென்ஸ் படத்தில் மடோனா செபாஸ்டியன்!

நடிகை மடோனா செபாஸ்டியன் பென்ஸ் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, நிவின் பாலி, மாதவ... மேலும் பார்க்க

கோப்பையை தக்கவைத்தாா் அல்கராஸ்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டாா்.இறுதிச்சுற்றில் அவா், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலி... மேலும் பார்க்க

நெல்லையை வென்றது சேப்பாக்!

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 6-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 41 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை திங்கள்கிழமை வென்றது. முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ர... மேலும் பார்க்க