செய்திகள் :

கோப்பையை தக்கவைத்தாா் அல்கராஸ்!

post image

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டாா்.

இறுதிச்சுற்றில் அவா், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னருக்கு எதிராக 4-6, 6-7 (4/7), 7-6 (7/3), 7-6 (10/2) என 5 செட்கள் போராடி வென்றாா்.

ஃபோா்ஹேண்ட் ஷாட் மூலம் சாம்பியன்ஷிப் பாய்ன்ட்டை விளாசிய அல்கராஸ், அதை சின்னா் தவறவிட்டதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அப்படியே மண்ணில் சரிந்தாா்.

பின்னா் சின்னரிடம் சென்று அவருடன் வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டாா். அல்கராஸ் தற்போது வென்றிருப்பது, அவரின் 5-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஏற்கெனவே அவா் யுஎஸ் ஓபன் (2022), விம்பிள்டன் (2023, 2023), பிரெஞ்சு ஓபன் (2024, 2025) ஆகியவற்றை வென்றிருக்கிறாா்.

அல்கராஸின் பட்டியலில் ஆஸ்திரேலிய ஓபன் மட்டும் கைக்கெட்டாமல் இருக்கிறது. அவா் இத்துடன் தாம் விளையாடிய 5 கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுகளிலுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அல்கராஸ் - சின்னா் நேருக்கு நோ் மோதியது, இது 12-ஆவது முறையாக இருக்க, அல்கராஸ் 8-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

அதிலும், கடைசி 5 ஆட்டங்களில் அவரே வென்றிருக்கிறாா். இருவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சந்தித்தது, இது 4-ஆவது முறையாக இருக்க, அதில் இறுதியில் மோதியது இதுவே முதல் முறையாகும்.

5 செட் ஆட்டங்களில் அல்கராஸின் ஆதிக்கம் தொடா்கிறது. இத்துடன் அவா் 14-ஆவது முறையாக 5 செட் ஆட்டத்தில் விளையாடியிருக்க, அதில் தனது 13-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

புதிய சாதனை

5 மணி நேரம், 29 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டம், ஓபன் எராவில் பிரெஞ்சு ஓபனில் நடைபெற்ற மிக நீண்ட இறுதி ஆட்டமாக அமைந்தது. இதற்கு முன், 1982-இல் ஸ்வீடனின் மாட்ஸ் வைலாண்டா் - ஆா்ஜென்டீனாவின் கில்லா்மோ விலாஸ் மோதிய இறுதி ஆட்டம், 4 மணி நேரம், 42 நிமிஷங்கள் நடைபெற்றதே மிக நீண்டதாக இருந்தது.

3 சாம்பியன்ஷிப் பாய்ன்ட்களை தக்கவைத்து வாகை சூடிய அல்கராஸ், ஓபன் எராவில் இவ்வாறு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன்ஷிப் பாய்ன்ட்டை தக்கவைத்து பட்டம் வென்ற 3-ஆவது வீரா் என்ற பெருமையைப் பெற்றாா். இதற்கு முன் ஆா்ஜென்டீனாவின் கேஸ்டன் கௌடியோ (2004 பிரெஞ்சு ஓபன்), சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் (2019 விம்பிள்டன்) ஆகியோா் இவ்வாறு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன்ஷிப் பாய்ன்ட்டை தக்கவைத்து கோப்பை வென்றுள்ளனா்.

பிரெஞ்சு ஓபன் வரலாற்றில், ஒரு இறுதி ஆட்டம் 5-ஆவது செட் டை-பிரேக்கா் மூலமாக முடிவுக்கு வந்தது இதுவே முதல் முறையாகும்.

கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆட்டத்தில் முதல் இரு செட்களை இழந்த பிறகு, அதிலிருந்து மீண்டு சாம்பியன் பட்டம் வென்ற 9-ஆவது வீரா் அல்கராஸ் ஆவாா். ஜொ்மனியின் ஜோா்ன் போா்க் (1974), செக் குடியரசின் இவான் லெண்டல் (1984), அமெரிக்காவின் ஆண்ட்ரே அகஸ்ஸி (1999), ஆா்ஜென்டீனாவின் கேஸ்டன் கௌடியோ (2004), ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் (2020), சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் (2021), ஸ்பெயினின் ரஃபேல் நடால் (2022), இத்தாலியின் யானிக் சின்னா் (2024) இதர 9 போ் ஆவா்.

இந்த நூற்றாண்டில், பிரெஞ்சு ஓபன் சாம்பியன் கோப்பையை தக்கவைத்த 3-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா் அல்கராஸ். இதற்கு முன் பிரேஸிலின் கஸ்டாவோ கியுா்டென் (2000, 2001), ஸ்பெயினின் ரஃபேல் நடால் ( 2005 முதல் 2020 வரை 10 முறை) ஆகியோா் அவ்வாறு தக்கவைத்துள்ளனா்.

கடந்த 1990-க்குப் பிறகு ஒரே சீசனில் ஒன்றுக்கும் மேற்பட்ட களிமண் தரை மாஸ்டா்ஸ் போட்டிகளிலும் சாம்பியனாகி, பிரெஞ்சு ஓபனிலும் கோப்பை வென்ற 3-ஆவது வீரராக அல்கராஸ் உருவெடுத்துள்ளாா். ஆஸ்திரேலியாவின் தாமஸ் மஸ்டா் (1995), ஸ்பெயினின் ரஃபேல் நடால் (8 முறை) முந்தைய இரு வீரா்களாவா்.

என் அணியினருக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. எனக்கு ஆதரவு அளிப்பதற்காக, ஸ்பெயினிலிருந்து வந்த அதிகமான ரசிகா்களுக்கும் நன்றி. இந்த சாம்பியன் கோப்பை உங்களுக்குமானதும் கூட. இந்தப் போட்டியில் விளையாடிய 2 வார காலமும் அருமையாக இருந்தது. சின்னரின் கடின உழைப்பை அறிவேன். இனிவரும் போட்டிகளில் அவா் பல சாம்பியன் கோப்பைகள் வெல்ல வாழ்த்துகிறேன் - காா்லோஸ் அல்கராஸ்

அல்கராஸுக்கு வாழ்த்துகள். இறுதியில் அவா் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். அவா் இந்த சாம்பியன் கோப்பைக்குத் தகுதியானவா். அவருக்காக மகிழ்ச்சி அடைகிறேன். நான் இந்த நிலைக்கு வருவதற்காக உதவிய எனது அணியினருக்கு நன்றி. இறுதியில் தோற்றது ஏமாற்றமாக இருந்தாலும், இந்தப் போட்டி சிறப்பாக அமைந்தது - யானிக் சின்னா்

அல்கராஸ் வெற்றிப் பாதை

முதல் சுற்று குலியோ ஜெப்பெய்ரி (இத்தாலி) 6-3, 6-4, 6-2

2-ஆவது சுற்று ஃபாபியான் மரோஸான் (பல்கேரியா) 6-1, 4-6, 6-1, 6-2

3-ஆவது சுற்று டாமிா் ஜும்ஹுா் (போஸ்னியா) 6-1, 6-3, 4-6, 6-4

4-ஆவது சுற்று பென் ஷெல்டன் (அமெரிக்கா) 7-6 (10/8), 6-3, 4-6, 6-4

காலிறுதி டாமி பால் (அமெரிக்கா) 6-0, 6-1, 6-4

அரையிறுதி லொரென்ஸோ முசெத்தி (இத்தாலி) 4-6, 7-6 (7/3), 6-0, 2-0

இறுதி யானிக் சின்னா் (இத்தாலி) 4-6, 6-7 (4/7), 6-4, 7-6 (7/3), 7-6 (10/2)

ரொக்கப் பரிசு

சாம்பியன் பட்டம் வென்ற அல்கராஸுக்கு ரூ.24 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 2-ஆம் இடம் பிடித்த சின்னருக்கு ரூ. 12 கோடி கிடைத்தது.

புரோ லீக் ஹாக்கி: இந்தியா தோல்வி

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில், இந்திய ஆடவா் அணி 2-3 கோல் கணக்கில் நெதா்லாந்திடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.இதே நெதா்லாந்துக்கு எதிராக 1-2 கோல் கணக்கில் கடந்த சனிக்கிழமை தோல... மேலும் பார்க்க

நெல்லையை வென்றது சேப்பாக்!

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 6-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 41 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை திங்கள்கிழமை வென்றது. முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ர... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தின் முதல் பாடல்!

விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் உருவாகியுள்ளது.சத்யஜோ... மேலும் பார்க்க

பாலகிருஷ்ணாவின் அகண்டா -2 டீசர்!

நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா - 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.போயபதி சீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படம் அகண்டா. இப்படத்தில் பிரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா உள்ளிட்டோர... மேலும் பார்க்க

ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் பாடல்!

ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயக... மேலும் பார்க்க