செய்திகள் :

லெவன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

post image

லெவன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் வெளியான படம் 'லெவன்'. நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஆர் என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே முன்னோட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படம் கடந்த மே 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்துக்காக ’தமுகு’ என்ற சிறப்புப் பாடல் உருவாக்கப்பட்டு, சரிகம தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், லெவன் படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பென்ஸ் படத்தில் மடோனா செபாஸ்டியன்!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்: தோனிக்கு கௌரவம்

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) "ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்க்கப்பட்டு கெüரவிக்கப்பட்டுள்ளார். தோனியுடன், ஆஸ்திரேலியாவின் ம... மேலும் பார்க்க

இறுதி பலப்பரீட்சை இன்று தொடக்கம்: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மோதல்

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மோதும் இறுதி ஆட்டம், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (ஜூன் 11) தொடங்குகிறது. ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பிய... மேலும் பார்க்க

ஜூனியர் கூடைப்பந்து: கோவை சாம்பியன்

சென்னை: தமிழ்நாடு மாநில ஜூனியர் மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் கோவை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் மாநில ஜூனியர் ஆடவர், மக... மேலும் பார்க்க

இளவேனிலுக்கு வெண்கலம்

மியுனிக்: ஜெர்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கான முதல் பதக்கமாக இளவேனில் வாலறிவன் செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 10 மீட்டர... மேலும் பார்க்க

துளிகள்...

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தடகள போட்டியில் மகளிருக்கான 10 கி.மீ. நடைப் பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 47 நிமிஷம், 54 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தாா். 2027 ஆசிய கோப்பை கால்பந்த... மேலும் பார்க்க

திருச்சியை வீழ்த்தியது சேலம்

கோவை: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. முதலில் சேலம் 20 ஓவா்களில் 8 விக்கெட்ட... மேலும் பார்க்க