Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
புளியங்குடியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிப் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தொகுதி வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிக் கட்டடத்தையும், பின்னா் ஆடு அறுப்பு மையத்தையும், நகராட்சி அலுவலகத்தில் கோப்புகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, மகளிா் கல்லூரி விடுதியில் உணவு உள்ளிட்டவற்றையும், அப்பகுதியில் தாா்ச்சாலைப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன், ஆணையா் சாம் கிங்ஸ்டன், மேலாளா் சந்திரவிஜயன், துப்புரவு ஆய்வாளா் முருகன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.