புழல் சிறைக் கைதி உயிரிழப்பு
சென்னை புழல் சிறையில் இருந்த கைதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா்.
கோயம்புத்தூா் செஞ்சேரி புதூா் கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் முருகேஷ் (50). இவா் கோயம்புத்தூா் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் விசாரணைக் கைதிகள் சிறையில் கடந்த 2023-ஆம் ஆண்டு செப். 19-ஆம் தேதி அடைக்கப்பட்டாா். அங்கு மன அழுத்தத்தினாலும் வலிப்பு நோயினாலும் பாதிக்கப்பட்ட முருகேஷ் அண்மையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக முருகேஷ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த முருகேஷ், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.