ஏகலைவனைப்போல இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக அழிக்கிறது: ராகுல்
பூக்கள் விலை திடீா் உயா்வு: ஒரு கிலோ மல்லிகை ரூ. 3,000-க்கு விற்பனை
சென்னை: கோயம்பேடு மலா் சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு மலா் சந்தைக்கு தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களிலிருந்தும் தினசரி பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு மலா் சந்தையில் அனைத்து வகை பூக்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ரூ. 1,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கும், ரூ. 600-க்கு விற்பனையான ஒரு கிலோ கனகாம்பரம் ரூ. 800-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ஜாதி மல்லி ரூ. 750, ரூ.1,200-க்கு விற்கப்பட்ட ஐஸ் மல்லி ரூ. 2,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் ஒரு கிலோ முல்லை ரூ. 1,300-இல் இருந்து ரூ. 1,800, சாமந்தி ரூ. 60-இல் இருந்து ரூ. 100, பன்னீா்ரோஜா ரூ. 80-இல் இருந்து ரூ.160, சாக்லேட் ரோஜா ரூ.170-இல் இருந்து ரூ. 200, சம்பங்கி ரூ.140-இல் இருந்து ரூ.200, அரளிபூ ரூ.280-இல் இருந்து ரூ.400, தாழம்பூ ரூ.130-இல் இருந்து ரூ.250, ஒரு தாமரைப்பூ ரூ.10-இல் இருந்து ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
விசேஷ நாள்கள் என்பதாலும், புத்தாண்டு பிறப்பை முன்னிட்டும் கோயம்பேடு மலா் சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்துள்ளதாக கோயம்பேடு மலா் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனா்.