MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
பூச்சி மருந்து சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு
பாரூா் அருகே பூச்சி மருந்தை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஒப்பந்தவாடி காளியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் திருப்பதி. இவரது ஒன்றரை வயது மகன் ரித்தீஷ் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளாா். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரித்தீஷ், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பா்கூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.