சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்
கோவையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தனியாா் நிறுவன ஊழியரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னகலையமுத்தூா் என்.டி.நகரைச் சோ்ந்தவா் சௌந்தர்ராஜன் (40). இவா் கோவை உடையாம்பாளையம் விவேகானந்தா சாலையில் உள்ள வீட்டின் இரண்டாவது தளத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, கணபதி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
செளந்தர்ராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில், அவா் தங்கியிருந்த வீட்டின் அறையிலிருந்து துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளரான தனசேகா், துடியலூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அங்கு உடல் அழுகிய நிலையில் சௌந்தரராஜன் இறந்துகிடந்தாா். சடலத்தை மீட்ட போலீஸாா் உடற் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதிக அளவில் மது அருந்தியதால் அவா் இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.