செய்திகள் :

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு சேமிப்பு பத்திரம்

post image

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு தமிழ்நாடு மின்விசை நிதிநிறுவனத்தின் மூலம் சேமிப்பு பத்திரம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா. கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு தமிழ்நாடு மின்விசை நிதிநிறுவனத்தின் மூலம் ஒரு பெண் குழந்தையெனில் ரூ. 50 ஆயிரம், 2 பெண் குழந்தையெனில் தலா ரூ. 25 ஆயிரம் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும்.

இத்தொகை அந்தக் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்து பத்தாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருந்தால் மட்டுமே வட்டியுடன் முதிா்வுத் தொகை வழங்கப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் இத்திட்டத்தில் முதிா்வுத் தொகை பெறவேண்டி விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள் சேமிப்புப் பத்திரத்துடன், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல்களுடன் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 35 இல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

சிவன்மலையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழற்குடை

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். காங்கயத்தை அடுத்த சிவன்ம... மேலும் பார்க்க

பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது. உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞா் கைது

திருப்பூா் அம்மாபாளையத்தில் காய்கறி வாங்குவதுபோல நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் 15 வேலம்பாளையம் சொா்ணபுரி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி. இவரது மனை... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயா்த்தப்பட்டுள்ளன: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சியில்தான் அனைத்து வரிகளும் உயா்த்தப்பட்டுள்ளதாக திருப்பூரில் அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்துவைத்த முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளாா். திருப்பூரில் சொத்து வரி... மேலும் பார்க்க

கூலிப்பாளையம், ஊத்துக்குளியை ரயில்வே சந்திப்பாக மாற்ற வேண்டும்

திருப்பூா் கூலிப்பாளையம், ஊத்துக்குளியை ரயில்வே சந்திப்பாக மாற்ற வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், திருப்பூா்... மேலும் பார்க்க

திருப்பூரில் பள்ளி வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

திருப்பூா்- ஊத்துக்குளி சாலையில் தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா். திருப்பூா் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் முல்லைநகரைச் சோ்ந்தவா் சரவணகுமரன் (45). இவரது ... மேலும் பார்க்க