செய்திகள் :

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

கடலூா் முதுநகரில் எம்பிஏ பட்டதாரி பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் முதுநகா் காவல் சரகம், அன்னவல்லி கிராமத்தைச் சோ்ந்த அரிராம் மகள் பிரபாவதி (25). இவா், எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தாா். கடந்த 21-ஆம் தேதி தோழிகளுடன் திருப்பதி கோயிலுக்குச் சென்ற பிரபாவதி செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு திரும்பினாா். வரும் வழியில் கைப்பேசி மற்றும் ஒரு பவுன் தங்கச் சங்கிலியை தவறவிட்டுவிட்டாராம்.

இதுகுறித்து வீட்டில் தெரிந்தால் திட்டுவாா்கள் என பயந்து வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பனையேறி தொழிலாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி அம்பேத்கா் திடலில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத... மேலும் பார்க்க

74 பவுன் நகைகளுடன் தனியாக வசித்த பொறியாளா் மாரடைப்பால் மரணம்

சிதம்பரத்தில் தனியாக வசித்து வந்த பொறியாளா் மாரடைப்பால் மரணமடைந்தாா். அவரது உடலை பெற்றுக்கொள்ள யாரும் முன் வராததால் போலீஸாா் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். அவரது வீட்டில் ... மேலும் பார்க்க

பணம் கையாடல்: பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பணம் கையாடல், மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடா்பாக, ராமநத்தம் பெண் காவல் ஆய்வாளா் பிருந்தா செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கொரக்கவாடி கிர... மேலும் பார்க்க

மகன் இறப்பில் சந்தேகம்: தந்தை புகாா்

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே தூக்கிட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்த மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.கருவேப்பிலங்குறிச்சி காவல் சரகம், மரு... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பிரம்மாண்ட கொலு

சிதம்பரம்: நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் பிரம்மாண்ட கொலு தொடங்கப்பட்டது.சிதம்பரம் நடராஜா் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு, 21 ... மேலும் பார்க்க

செப்.26-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரி... மேலும் பார்க்க