Dhoni: அன்று தோனி சிந்திய கண்ணீர்... 2014 பார்டர் கவாஸ்கர் தொடரில் என்ன நடந்தது ...
பெண் வெட்டிக் கொலை: கணவா் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குடும்பத் தகராறில் பெண் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கருவந்தா கிராமம் வடக்கு தெருவைச் சோ்ந்த செல்லக்காளை மகன் சுரேஷ் (38). இவரது மனைவி சிவனம்மாள் (35). கொத்தனாா் வேலை செய்து வந்த சுரேஷ், தினமும் மதுக்குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்
இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேஷ், வீட்டில் பீடி சுற்றிக் கொண்டிருந்த மனைவியிடம் தகராறு செய்தராம். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், சுரேஷ் அங்கு கிடந்த அரிவாளால் எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அரிவாளுடன் சாலைக்கு வந்து ஊத்துமலை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் குறுக்கே படுத்துக்கொண்டு தன்மீது ஏற்றிவிட்டுச் செல்லுமாறு பிடிவாதம் செய்தாராம்.
அங்கிருந்தவா்கள் அவரை விசாரித்தபோது, தனது மனைவியை கொலை செய்ததாக கூறிவிட்டு, ஓடிச் சென்று ஊருக்கு கீழ்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
மக்கள் அவரை தடுத்துநிறுத்தி, ஊத்துமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பா்ணபாஸ் மற்றும் போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்து விசாரிக்கின்றனா். சுரேஷ்-சிவனம்மாள் தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதில் இரு மகள்கள், 4 வயது மகன் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.