பெண்ணை மது அருந்த வற்புறுத்திய நபர் மீது வழக்குப்பதிவு!
பெங்களூரில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பெண்ணை மது அருந்தச் சொல்லி வற்புறுத்திய நபர் மீது அம்மாநில காவல்துறையினரிடம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெல்லந்தூர் பகுதியிலுள்ள தனியார் கேளிக்கை விடுதியில் நேற்று (டிச.31) இரவு புத்தாண்டுக் கொண்டாத்திற்காக ஒடிசாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் அந்த பெண்ணிடம் மது அருந்த சொல்லி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார், இதனால் கோவமடைந்த அந்த நபர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். பின்னர், சத்தம் கேட்டு அங்கு கேளிக்கை விடுதியின் நிர்வாகத்தினர் வருவதை அறிந்த அந்நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த நபர் தன்னிடம் பாலியல்துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாகவும், தகாத முறையில் நடந்துக்கொண்டதாகவும் அந்த பெண் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதையும் படிக்க: டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி!
பின்னர் அந்நபரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய அந்த நபரைத் தேடி வருகின்றனர்.
இதேப்போல், கடுபீசன்ஹல்லி பகுதியிலுள்ள பிரபல கேளிக்கை விடுதியில் நேற்று (டிச.31) இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது அங்கு வந்த இளம் பெண்ணிடம் மற்றொரு நபர் பாலியல் சீண்டல்களில் ஈடுப்பட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில், அந்த நபரின் மீது மரதல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அங்குள்ள விடியோ காட்சிகளைக் கைப்பற்றி அந்நபரைத் தேடி வருகின்றனர்.