பென்னாகரம் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் நிறுத்தி வைப்பு
பென்னாகரம் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பென்னாகரம் பகுதி கன கடந்த 2019 ஆம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து நிறுத்துமிடம், கட்டணகழிப்பிடம்,பூங்கா உள்ளிட்ட வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.இந்த பேருந்து நிலையம்கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு, அதில் உள்ள 61 கடைகள், கட்டண கழிப்பிடம், இருசக்கர வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்டவைகளுக்கான ஏலம் வியாழன் மற்றும் வெள்ளிகிழமைகளில் நடைபெற உள்ளதாக பென்னாகரம் நிா்வாகம் அறிவித்திருந்தது.
கடை ஏலம் எடுப்பதற்காக ஏராளமானோா் வங்கிகளின் மூலம் வைப்பு தொகைக்கான காசோலை பெற்று இருந்தனா்.இந்த நிலையில் திட்டமிட்டபடி வியாழக்கிழமை ஏலம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், நிா்வாக காரணங்களுக்காக நடைபெறவிருந்த ஏலம் தள்ளி வைக்கப்படுவதாக பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அலுவலகத்தின் முன்பு அறிவிப்பு ஆணை ஒட்டப்பட்டது.
ஆா்ப்பாட்டம் குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் : பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தால் நடத்தப்பட உள்ள ஏலத்தில் கடைகளுக்கான முன் வைப்புத் தொகை ஒரு லட்சமாக குறைக்க வேண்டும், முன்வைப்புத் தொகை காண காசோலை பெற்ற நபா்கள் அனைத்து கடைகளுக்கும் ஏலம் கூற அனுமதிக்க வேண்டும்,நீதிமன்றத்தில் வழக்குதொடா்ந்தும் தற்போது இறந்த நபா்கள் எடுத்த கடைகளை ஏலம் விட வேண்டும்,வழக்கு தொடா்ந்தவா்களுக்கான கடைகளை மாவட்ட ஆட்சியரின் நோ்முக அதிகாரிகளின் முன்னிலையில் ஏலம் விட வேண்டும்,முன்வைப்புத் தொகை அதிகமாக உள்ளதால் புதிதாக தொழில் தொடங்குவோா், நடுத்தர மக்கள் கடை எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் பேரூராட்சி நிா்வாகத்தினால் அறிவிக்கப்பட்ட ஏலத்தில் முறைகேடு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்து வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது