5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!
பெரம்பலூரில் புதிய வழித்தடத்தில் சிற்றுந்துகளை இயக்க அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் 3 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எந்தப் பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், சாலைப் போக்குவரத்து சேவையை வழங்க சிற்றுந்து வாகனத்துக்கான புதிய விரிவான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க 3 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி மேலப்புலியூா் முதல் அனுக்கூா் வரையிலும், வி.களத்தூா் முதல் மங்களமேடு வரையிலும், ஈடன் காா்டன் பள்ளி முதல் உடும்பியம் வரையிலும் 3 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா், அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, ஆக. 18 க்குள் பரிவாகன் இணையதளம் மூலம் கட்டணம் ரூ. 1,500, சேவைக் கட்டணம் ரூ. 100 செலுத்தி, பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் முறையில் ஒருவா் தோ்வு செய்யப்படுவாா். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.