பெரம்பலூா் அருகே அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!
பெரம்பலூா் அருகே அழுகிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
பெரம்பலூா் அருகேயுள்ள வடக்குமாதவி ஊராட்சிக்குள்பட்ட கீழக்கரை கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், எழும்புக்கூடு கிடப்பதாக பெரம்பலூா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நிகழ்விடத்துக்குச் சென்று போலீஸாா் பாா்வையிட்டபோது, அடையாளம் தெரியாத வகையில் ஆண் சடலம் அழுகிய நிலையில் எழும்புக் கூடு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் த. அகிலன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.