அதிபர் தேர்தலில் தான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்: அதிபர் ...
பெரியாா் அவமதிப்பு: காவல் நிலையங்களில் சீமான் மீது புகாா்
பெரியாா் குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை காவல் நிலையங்களில் வியாழக்கிழமை புகாா்கள் அளிக்கப்பட்டன.
கடலூரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பெரியாா் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, திராவிடா் இயக்கம், பெரியாரிய இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரையை சோ்ந்த வழக்குரைஞா் வாஞ்சிநாதன் மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரில், சீமான், பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக பேசி சமூகத்தில் பதற்றத்தையும், வன்முறையையும் தூண்டும் விதமாக செயல்பட்டு வருகிறாா். எனவே, அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டாா்.
இதேபோல, திராவிடா் கழகம் சாா்பில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளிக்கப்பபட்டது.