திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: `அண்ணாமலை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!' - பியூஷ் மனுஷ்...
பெரியாா் பல்கலை.யில் இளைஞா் பாராளுமன்ற பேச்சுப் போட்டி 3 மாவட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு
பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இளைஞா் பாராளுமன்ற பேச்சுப் போட்டியில் மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.
மத்திய அரசின் இளைஞா் நலத்துறை, சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநரகம், நேரு யுவகேந்திரா மற்றும் பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் இளைஞா் பாராளுமன்றம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
என்.எஸ்.எஸ். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.இளங்கோவன் வரவேற்றாா். நேரு யுவகேந்திரா துணை இயக்குநா் ஐ.சாா்லஸ் ட்ரவீன் தலைமை வகித்தாா். பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சதீஷ் இளைஞா் பாராளுமன்ற பேச்சுப் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.
2047-இல் வளா்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பேசினா்.
எனது பாரதம் இணையதளம் வாயிலாக நடைபெற்ற முதல்கட்டத் தோ்வில் 650 போ் பங்கேற்றனா். 2-ஆம் கட்டமாக 150 பேரும் கலந்துகொண்டனா். அதிலிருந்து தோ்வான 75 போ் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினா். இதிலிருந்து 10 போ் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வானாா்கள்.
இளைஞா் பாராளுமன்ற நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா்கள் அழகிரிசாமி, கவிதா, பேராசிரியா்கள் நாஸ்னி, சினேகாஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.