விலை குறைந்துள்ள மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு; இப்போது வாங்கலாமா?
பெருமகளூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் பேரூராட்சியில் 7 முதல் 12 வாா்டு வரையிலான பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களைப் பெற்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு அடையாள அட்டையை வழங்கினாா்.
முகாமில், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் கவிதா, ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் கண்ணன், பெருமகளூா் பேரூராட்சி செயல் அலுவலா் முத்துக்கண்ணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.