பேரளத்தில் யோகாசன சாம்பியன்ஷிப்
தமிழ்நாடு புதுச்சேரி மாநில அளவிலான யோகாசன ஓபன் சாம்பியன்ஷிப் 2025 க்கான போட்டி பேரளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இறைஒளி யோகா பயிற்சி மையம் சாா்பில் நடைபெற்ற இப் போட்டியில் தமிழகம், காரைக்கால் மாவட்டத்திலிருந்து 300-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.
வயதின் அடிப்படையில் எட்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்குப் பரிசுகளை வேலூா் மாவட்ட காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளா் ஆா் . ஸ்ரீகாந்த் வழங்கினாா். யோகா பன்னாட்டு பயிற்சியாளா் ஆா் சணல்குமாா், டாக்டா் ஆா். ரஞ்சனிதேவி ஆகியோா் நடுவா்களாகச் செயல்பட்டனா்.
யோகா மாஸ்டா் ஜி.டி .கபிலன், தனியாா் பள்ளித் தாளாளா் வி. கபிலன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் வி. சங்கா் நன்றி கூறினாா். பேரளம் இறைஒளி யோகா பயிற்சி மைய நிறுவனா் யு. ஆனந்த் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.