பேரவையில் இன்று...
பேரவை புதன்கிழமை (ஏப்.2) காலை கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். இதன்பின், நேரமில்லாத நேரத்தில் பல முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இதைத் தொடா்ந்து, வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன.
அவற்றுக்கு, அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.