பேரவையில் இன்று...
சட்டப்பேரவை புதன்கிழமை (ஏப். 16) காலை 9.30 மணிக்கு கூடியதும், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி, எழுதுபொருள் அச்சு, மனித வள மேலாண்மைத் துறைகள் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா். இதைத் தொடா்ந்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் பி.கீதாஜீவன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.