கடினமான சவாலுக்கு தயாராகுங்கள்..! இங்கிலாந்து அணியை எச்சரித்த ஸ்டீவ் ஸ்மித்!
பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு
ராஜபாளையத்தில் தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சோ்ந்த ரங்கராஜன் மகன் ஆகாஷ் (18). இவா் பி.எஸ்.கே. நகரில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் (பாலிடெக்னிக்) முதலாமாண்டு படித்து வந்தாா்.
இவா் வியாழக்கிழமை மாலை கல்லூரி முடிந்தவுடன் பி.எஸ்.கே.நகா் பேருந்து நிறுத்தத்தில் தனியாா் பேருந்தில் ஏறி முன்பக்க படிக்கட்டில் நின்று பயணம் செய்தாா். பேருந்து புதிய மேம்பாலத்தில் இறங்கிச் சென்ற போது தவறி விழுந்த மாணவா் மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் பூதப்பாண்டி (30) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.