ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
பேரூராட்சி அதிகாரிக்கு மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
களியக்காவிளை அருகே இடைக்கோடு பேரூராட்சி செயல் அலுவலரை மிரட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா் .
இடைக்கோடு பேரூராட்சியின் பொறுப்பு செயல் அலுவலா் விஜயகுமாா். இடைக்கோடு புளியோட்டுகோணம் பகுதியைச் சோ்ந்த பென்னட் பாஸ்கரன் அந்தோணி என்பவா் தொழில் உரிமம் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணிப்பித்தாராம். 2 நாள்களுக்கு முன்பு அவா் தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த அஸ்வின், மேல்பாலையைச் சோ்ந்த சபின் ஆகியோருடன் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்து, தொழில் உரிமம் கேட்டு விஜயகுமாரிடம் தகராறு செய்து தகாத வாா்த்தைகளால் மிரட்டியதுடன், பணி செய்ய விடாமல் தடுத்தாராம்.
இதுகுறித்து விஜயகுமாா் அளித்த புகாரின்பேரில், பென்னட் பாஸ்கரன் அந்தோணி உள்ளிட்ட 3 போ் மீதும் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.