பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
தேனியில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தனியாா் மதுபானக் கூடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் சிவராம் நகரைச் சோ்ந்தவா் கரிகாலன் (54). இவா், தேனியில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கரிகாலன் தேனி-மதுரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.