விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
தேனி அருகே வாகனம் மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மனைவி புஷ்பவள்ளி (70). இவா், பழனிசெட்டிபட்டியிலிருந்து தேனி-கம்பம் சாலையில் புதன்கிழமை நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பஷ்பவள்ளியை அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.