செய்திகள் :

பொங்கல் பரிசு டோக்கன் எப்போது? தமிழக அரசு அறிவிப்பு

post image

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட கடந்த வாரம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

மேலும், இலவச வேட்டி மற்றும் சேலைகளும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பேனா முனை உடைக்கப்பட்டதா? பரங்கிமலை கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தது யார்?

இந்த நிலையில், பொங்கல் தொகுப்பை பெறுவதற்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் வீடுவீடாகச் டோக்கன் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும், ஒரு நாளுக்கு 200 குடும்ப அட்டைதாரர்கள் பரிசுத் தொகுப்பை பெறும் வகையில் டோக்கன் வழங்கப்படவுள்ளது.

பொங்கல் தொகுப்பு பெறும் நாள், நேரம் உள்ளிட்டவை குறிப்பிட்டு வீடுவீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலு நாச்சியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் முதல் ... மேலும் பார்க்க

சென்னையில் ஆயுத விற்பனையா? போதைப் பொருள் கும்பலிடம் துப்பாக்கிகள் பறிமுதல்!

சென்னையில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கும்பலிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்... மேலும் பார்க்க

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும் -முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி

கோவை: பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்கும் விவகாரத்தில் மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநரும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளிகளைத் தனியாருக்கு தத்துக் கொடுக்கவும் இல்லை; தாரைவாா்க்கவும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை, அறிவிப்புகள் மற்றும்... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்கள்: விநியோகத்தை 4 நாள்களில் முடிக்க உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வெள்ளிக்கிழமை (ஜன. 3) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. 4 நாள்களுக்குள் டோக்கன்கள் வழங்கும் பணியை நிறைவு செய்ய உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரிசி ... மேலும் பார்க்க