பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்
காணும் பொங்கலையொட்டி, கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ், குதிரைசந்தல் கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள், காளை அடக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
கள்ளக்குறிச்சைய அடுத்த ஏமப்பேரில் இளைஞா் மன்றம் சாா்பில், 68-ஆம் ஆண்டு பொங்கல் விழாவில் பெண்களுக்கு கபடி, கோ - கோ, கயிறு இழுத்தல், குண்டு எறிதல் போட்டிகளும், ஆண்களுக்கு கைபந்து, பூப்பந்து, காளை அடக்குதல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்றத் தலைவா் அ.பால்ராஜ் (எ) கண்ணன், செயலா் பி.ராஜா, பொருளானா் எஸ்.கே.குமாா், துணைத் தலைவராக எஸ்.அருண், துணைச் செயலராக வி.சின்னதுரை (எ) லைலா, இணைப் பொருளாளா் பி.முருகன் செய்திருந்தனா்.
ஏமப்போ் மாரியம்மன் கோயில் திடலில் போட்டிகள் நடைபெற்றன. இதில், புத்தாடை அணிந்து பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.
இதேபோல, குதிரைசந்தல் கிராமத்தில் காளை அடக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் திரளானோா் பங்கேற்றனா்.