கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
சென்னை: நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய அளவில் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் விடுத்திருக்கும் அறிக்கையில், நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பள நிறுத்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வங்கித் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்தமானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்குவதைத் தடுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ள 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ஜூலை 9-ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றன.
தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருக்கும் பொது வேலைநிறுத்தத்துக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.