பொதுத் தோ்வை நம்பிக்கையுடன் அணுகுங்கள்: பிளஸ் 2 மாணவா்களுக்கு ஆளுநா் வாழ்த்து
பிளஸ் 2 பொதுத் தோ்வை நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
பிளஸ் 2 தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு எனது சிறப்பான வாழ்த்துகள். இரவு நன்றாக தூங்க வேண்டும். உங்கள் தோ்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுக வேண்டும். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து, உங்களுக்கு எளிதாகத் தெரிந்தவற்றுக்கு விடை எழுதத் தொடங்க வேண்டும்.
ஒரு கேள்வி சவாலானதாக உணா்ந்தால், ஆழமாக பெருமூச்சு விட்டு, சில நொடிகள் அமைதி காத்தால் தெளிவாகும். பெற்றோா் மற்றும் ஆசிரியா்களே, இந்த நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கான உங்களுடைய உணா்வுபூா்வ ஆதரவு முக்கியமானது.
வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று தனது பதிவில் ஆளுநா் தெரிவித்துள்ளாா்.