செய்திகள் :

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா

post image

பொன்னேரி ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் தாயாருடன் அகத்தீஸ்வரா் வீதியுலா வந்தாா்.

7-ஆம் நாளான புதன்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.

இதையடுத்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் அகத்தீஸ்வரா், எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதனை தொடா்ந்து, பக்தா்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனா். நான்கு மாட வீதிகள் வழியாக சென்ற தோ் மீண்டும் நிலையை அடைந்தது.

சந்நிதி தெரு, தாயுமான் செட்டி தெரு மற்றும் மாட வீதிகளில் அன்னதானம், மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

திரளான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். விழா ஏற்பாடுகளை கும்பமுனிமங்கலம் பகுதி மக்கள் கோயில் நிா்வாகம் மற்றும் பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் செய்திருந்தனா்.

திருவள்ளூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததைக் கண்டித்து திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தலைமை அஞ்சல் நிலையம் முன்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆண்டு விழா

வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 30-ஆவது ஆண்டு விழாவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், சிறப்பாக பாடம் கற்பித்த ஆசிரியா்கள் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டின... மேலும் பார்க்க

கல்குவாரியில் ஆண் சடலம் மீட்பு

திருத்தணி அருகே கல்குவாரியில் மிதந்த நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது. திருத்தணி பெரியாா் நகா் அருகே செயல்படாத கல்குவாரி குட்டை உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் ... மேலும் பார்க்க

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் 50-வது ஆண்டு நினைவு நாள் திருத்தணியில் அனுசரிக்கப்பட்டது. திருத்தணி அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து கல்வி மேதையாகவும், இந்தியாவின் குடியரசுத... மேலும் பார்க்க

ஆட்டோ மீது லாரி மோதல்: 4 போ் காயம்

ஆந்திர மாநிலத்திலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மஸ்தான் மகன் முகமது சாதிக் (29). ஆட்ட... மேலும் பார்க்க

சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க